ஷிரந்தி, நாமலிற்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு ; ராஜபக்சர்களை தொடரும் சிக்கல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவுக்கும் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில் “சிறிலிய” என்ற பெயரில் பயன்படுத்தி வங்கி கணக்கு தொடர்பில் பொலிஸ் நிதி குற்றவியல் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஜனவரி 27 ஆம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டிருந்தார்.

மீண்டும் அழைப்பு
ஆனால் தனிப்பட்ட விடயம் காரணமாக ஷிரந்தி ராஜபக்ஷ ஜனவரி 27 ஆம் அன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாவில்லை.
இதனால் பெப்ரவரி 3 ஆம் திகதி குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு ஷிரந்தி ராஜபக்ஷவுக்கும் நாமல் ராஜபக்ஷவுக்கும் மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.