இளைஞன் செய்த பெரும் மோசடி ; இழக்கப்பட்ட பல கோடி ரூபாய்கள்
பணமோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞன் ஒருவர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 88,050,000 ரூபாய் பெறுமதியுடைய 09 இரத்தினக் கற்களைப் பெற்று, அதற்கு 64,600,000 ரூபாய் பெறுமதியுடைய காசோலைகளை வழங்கிய குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முறைப்பாடு
இந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய, முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போதே கொள்ளுப்பிட்டி பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கொள்ளுப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.