நண்பர்களுக்கிடையில் வெடித்த தகராறு ; இரவில் ஒரே வீட்டிற்குள் அரங்கேறிய கொடூரம்
வெள்ளவத்தை பகுதியில் வீடொன்றினுள் இரு நண்பர்களுக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் நீண்டு கைகலப்பாக மாறியதில் பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெட்ரிகா வீதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று செவ்வாய்க்கிழமை (9) இரவு இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆரம்பக்கட்ட விசாரணை
உயிரிழந்த நபர் மற்றும் அவரது வீட்டில் தங்கியிருந்த நண்பர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக குறித்த நபர் அவரை பொல்லால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவத்தில் காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
65 வயதுடைய வெள்ளவத்தை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய 56 வயதான சந்தேகநபர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் வெள்ளவத்தை பொலிஸார் இவ்விடயம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.