அரசியலில் இருந்து விலகும் பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோன் ; அதிரடி அறிவிப்பு
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் அரசியலிலிருந்து விரைவில் விலக இருப்பதாக தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் ஜனாதிபதி மெக்ரோனின் ஜனாதிபதி பதவிக்காலம் இன்னும் ஒரு வருடத்தில் முடிவடையவுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல் முதலாக பிரான்ஸின் ஜனாதிபதியாக மெக்ரோன் தெரிவு செய்யப்பட்டார். அடுத்ததாக 2022ஆம் ஆண்டு இரண்டாவது தடவையாகவும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

பிரான்ஸ் அரசியலமைப்பின்படி மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக முடியாது
அடுத்து 2027ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரான்ஸ் அரசியலமைப்பின்படி ஒரு நபர் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக முடியாது. எனவே மெக்ரோனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது.
இந்நிலையில் சைப்ரஸில் அவர் மாணவர்களிடையே உரையாற்றியபோது கீழ்கண்டவாறு தெரிவித்துள்ளார். “நான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு அரசியலில் ஈடபடவில்லை. என் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் நான் அரசியலில் ஈடுபட மாட்டேன் எனக் கூறியுள்ளார்.