சட்டவிரோத வாகனப் பதிவு விவகாரம் ; மோட்டார் வாகனத் திணைக்கள முன்னாள் அதிகாரி கைது
மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் இடம்பெற்ற சட்டவிரோத வாகனப் பரிமாற்றச் செயற்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் நிர்வாகச் சேவை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கையூட்டல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் அனுமதி இன்றியும், சுங்க வரிகளைச் செலுத்தாமலும் சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் வாகனம் ஒன்றை, மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்து, அதன் முதலாம் உரிமையாளர் பரிமாற்றத்தை மேற்கொள்வதற்காகச் சேவைச் சாளர எண்களை வழங்கி, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் உள்ளீடு செய்ய நடவடிக்கை எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.