கனடாவில் இந்தியப் பெண் சுட்டுக் கொலை; அதிர்ச்சித் தகவல்!
கனடாவில் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியாவைச் சேர்ந்த நவ்நீத் கௌர் ( Navneet Kaur, 26)என்ற 26 வயதான பெண் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், விசாரணையின்போது சாட்சிகளின் வாக்குமூலம் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை காலை பொலிஸாருக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நவ்நீத் கௌருக்கு முதலுதவி அளித்துள்ளனர்.
]
திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம்
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந் நிலையில் , பெண்ணொருவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவருக்குப் பின்னால் ஒரு நபர் பின்தொடர்ந்து சென்றுள்ளார்.
சிறிது தூரம் சென்றதும் அப்பெண்ணிடம் அந்த நபர் ஏதோ பேசியுள்ளார். அதன்பிறகே அவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் அப்பெண்ணை சுட்டுள்ளார் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபரை பொலிஸார் உடனடியாக கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்டவர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த ஷரன்ஜித் சிங் (வயது 37) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது ஒரு திட்டமிட்ட கொலையாக இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர். எனினும் , இந்த கொலைக்கான பின்னணி மற்றும் அடிப்படை காரணம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு கனடா பொலிஸ் கேட்டுக்கொண்டுள்ளது.