ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; தேசியக் கொடியுடன் போராட்டத்தில் குதித்த பொதுஜன பெரமுனவின் முன்னாள் உறுப்பினர்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று(12) பொலன்னறுவையில் நடைபெறவுள்ள விவசாயி மாநாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கை பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் நேற்று (11) நண்பகல் முதல் ஹிங்குராக்கொட வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ரஜஎல கம், மின்னேரிய பகுதியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டுவசதி மேம்பாட்டு பிரதி அமைச்சர் டி.பி. சரத்தின் கட்டளைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைய, பிராந்தியத்திலுள்ள அரச நிறுவனங்களின் அதிகாரிகளை குறித்த விவசாயி மாநாட்டில் பங்கேற்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரவீந்திர லக்மால் பண்டார தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே குறித்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் தேசியக் கொடியை ஏந்தியவாறு வர்த்தக வளாகத்தின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.