இணையத்தில் தீயாய் பரவும் செல்ஃபி ; சிற்றூந்து பந்தயப் பயிற்சி த்ரிஷாவும் வருகிறாரா?
நடிகர் அஜித்குமாரின் சிற்றூந்து பந்தயப் பயிற்சி இடம்பெறும் சில்வர்ஸ்டோன் பகுதியில் நடிகை ராதிகா இருப்பது போன்ற காணொளி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தநிலையில், நடிகை ராதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை த்ரிஷாவுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
இதனால், நாளை சில்வர்ஸ்டோனில் நடைபெறவுள்ள சிற்றூந்து பந்தயத்தை நடிகை த்ரிஷாவும் நேரில் பார்வையிடுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள சில்வர்ஸ்டோனில் நடைபெறும் Michelin Le Mans Cup சிற்றூந்து பந்தயத்தை தமிழக முதலமைச்சர் விஜய் கொடியசைத்து ஆரம்பித்து வைக்கவுள்ளதாக Le Mans Cup நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா தொடர்பில் அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில் பல்வேறு கருத்துகளும் தகவல்களும் பரவி வருகின்றன.
இந்தநிலையில், த்ரிஷா தொடர்பாக தற்போது வெளியாகியுள்ள இந்த தகவலும் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
எனினும், நடிகை த்ரிஷா குறித்த சிற்றூந்து பந்தயத்தை நேரில் பார்வையிடவுள்ளதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.