தொலைபேசியில் தொல்லை கொடுத்தால் அபராதம்; பொலிஸார் எச்சரிக்கை!

Sri Lanka Police Sri Lankan Peoples Crime
By Sulokshi Apr 29, 2026 06:33 AM GMT
Report

    பொதுமக்களுக்கு டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகள் ஊடாக விடுக்கப்படும் அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்தும் நோக்கில், சட்ட நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2024 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க தொலைத்தொடர்பு (திருத்தப்பட்ட) சட்டத்தின் 32 ஆம் பிரிவின் கீழ், இவ்வாறான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் வழக்குச் செயல்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி, சட்டத்தரணி திலன் குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

தொலைபேசியில் தொல்லை கொடுத்தால் அபராதம்; பொலிஸார் எச்சரிக்கை! | Fine For Harassment Via Phone Police Warning

 100,000ய ரூபாய் வரை அபராதம்  

நியாயமான காரணமின்றி, ஒருவரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நோக்கில் மீண்டும் மீண்டும் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்வது அல்லது குறுஞ்செய்திகளை (SMS) அனுப்புவது தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஒருவரது தொலைபேசி இலக்கத்தை அவரது அனுமதியின்றி சமூக வலைத்தளங்களிலோ அல்லது பொது வெளியிலோ பகிர்ந்து, அவர்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்குவதும் இச்சட்டத்தின் கீழ் குற்றமாகக் கருதப்படும்.

சமூகவலைத்தளத்தில் பிரபலமான பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

சமூகவலைத்தளத்தில் பிரபலமான பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

இக்குற்றச்சாட்டுகளின் கீழ் குற்றவாளியாகக் காணப்படும் ஒருவருக்கு,100,000ய ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம். அதேசமயம் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும்.

அத்துடன், குற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட தொலைபேசி இணைப்பைத் துண்டிப்பதற்கான அதிகாரமும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சாரதிக்கு உடல்நல குறைவு; வீட்டுக்குள் பாய்ந்த அரச பேருந்து

சாரதிக்கு உடல்நல குறைவு; வீட்டுக்குள் பாய்ந்த அரச பேருந்து

தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகள் ஊடாக இவ்வாறான தொல்லைகளுக்கு உள்ளாகும் நபர்கள், அது தொடர்பான ஆதாரங்களுடன் அருகில் உள்ள காவல்துறை நிலையத்திலோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திலோ (CID) முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான மிக முக்கியமான சட்டப் பாதுகாப்பாக இது அமையும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.  

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US