நாமல் ராஜபக்சவுக்கு உதவிய பெண்ணின் பரிதாப நிலை!
கிரிஷ் நிறுவனம் தொடர்பான பண மோசடி மற்றும் முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
அவ்விருவரையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதம நீதவான் அஸங்க எஸ். போதரகம, இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.

பிணை கோரிக்கை நிராகரிப்பு
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சந்தேக நபருக்கு பிணை வழங்குவதா இல்லையா என்பது குறித்த உத்தரவை அன்றைய தினம் அறிவிப்பதாக நீதவான் மேலும் குறிப்பிட்டார்.
சந்தேகநபரான ஜானகி சிறிவர்தனவின் பிணை கோரிக்கை தொடர்பான உத்தரவு இன்று வாசிக்கப்பட்டதுடன், விசேடமான காரணங்கள் எவையும் சமர்ப்பிக்கப்படாமையால், அவரது பிணை கோரிக்கையை நிராகரிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.