யாழ் பல்கலைக்கழகத்தில் "திரைப்பட இசை வெளியீட்டு விழா!
ஜெயமோகன் அவர்களின் இயக்கத்தில் உருவான "பொய்மான்"திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் பிரபல கலைஞர்களுடன் பங்கு பற்றலில் நடை பெற உள்ளது.
புலம்பெயர்ந்து வாழும் ஈழத்து கலைஞர்களின் நடிப்பில் வெளியாக இருக்கும் முழு நீள திரைப்படமான பொய்மான் இந்திய திரைப்படங்களிற்கு இணையான தொழில்நுட்ப சாதனங்களை உட்புகுத்தி இப்படம் இலங்கை அவுஸ்திரேலியா ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தேசங்களில் புகழ்பெற்ற குறுந்திரைப்பட இயக்குனரும் சிறப்பு புற்றுநோயில் மருத்துவருமான Dr ஜெயமோகன் இதனை உருவாக்கியுள்ளார். புலம்பெயர் தேசங்களில் இம் மாத இறுதியிலும் இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பத்திலும் இத்திரைப்படம் வெளியாக இருக்கின்றது.
அந்த வகையில் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் புதன் கிழமை 11/01/2023 யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலை அரங்கில் பிரமாண்ட இசை நிகழ்ச்சியாக வெளியிடப்பட உள்ளது.