இலங்கையில் பஸ் நடத்துனரை எட்டி உதைத்த பெண் பயணி! வெளியான பரபரப்பு பின்னணி
கடவத்தையில் ஓடிக்கொண்டிந்த பஸ்ஸில், இருந்த பெண் பயணியொருவர் நடத்துனரை எட்டி உதைத்ததில் குறித்த நபர் பஸ்ஸின் பின் கதவின் வழியால் கீழே விழுந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், நடத்துனர் மட்டுமன்றி அந்த பெண்ணும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடவத்தையில் நேற்று திங்கட்கிழமை (15-08-2022) அன்று இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,
கொழும்பிலிருந்து கண்டி நோக்கி அன்றையதினம் மாலை பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றில், கிரிபத்கொடையில் வைத்து பெண்ணொருவர் ஏறியுள்ளார்.
பயணச் சீட்டை பெற்றுக்கொள்ளுமாறு அந்தப் பெண்ணிடம் நடத்துனர் கோரியுள்ளார்.
அப்போது சற்றும் கோபமடைந்த அந்தப் பெண், நடத்துனர் எட்டி உதைத்துள்ளார். இதனால், பின்கதவின் வழியாக கீழே விழுந்த நடத்துனர் கடும் காயமடைந்துள்ளார்.
எனினும், பஸ்ஸிலிருந்த ஏனைய பயணிகள் அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்தனர். அதன்பின்னர் கடவத்தை பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த நிலையில், அந்தப் பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் பல வருடங்களாக அதற்கான மருந்துகளை எடுத்து வருகின்றார் என்றும் அப்பெண்ணின் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.