தமிழரசுக் கட்சியின் உள்ளக மோதல்கள் ; பிளவுண்டுள்ள நிலையில் தோல்வி அச்சம்
தமிழரசுக்கட்சியின் உள்ளக மோதல்கள் காரணமாக மோசமாக பிளவுண்டுள்ள நிலையில் தோல்வி அச்சம் எழுந்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் நிலை கேள்விக்குறியாக மாறியுள்ளது.
சாள்ஸ் நிர்மலநாதன், தேர்தல் களத்தில் இருந்து ஒதுங்குவதாக ஆரம்பத்தில் அறிவித்திருந்தார். எனினும், ஆதரவாளர்களின் வற்புறுத்தல்களால் பொதுத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதாக அறிவித்தார்.
எனினும், அதிலிருந்து வெளியேறுவதாக, மீண்டும் அறிவித்துள்ள நிலையில் மன்னாரில் இருந்து வேட்பாளர்களை தெரிவு செய்ய தமிழரசுக்கட்சி தொடர்ந்து பல்வேறு முயற்சிகளிலும் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபட்டு வருகின்றனது.
எனினும் பலர் தமிழரசுக் கட்யினால் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்டுள்ள போதும், இதுவரை அவர்கள் தமது விருப்பத்தை தெரிவிக்கவில்லை என தெரிய வருகிறது.
தமிழரசுக்கட்சியின் உள்ளக மோதல்கள் காரணமாக மோசமாக பிளவுண்டுள்ள நிலையில் தோல்வி அச்சம் எழுந்துள்ளது.
இதனிடையே இலங்கை தமிழ் அரசுக்கட்சியிலிருந்து அண்மையில் விலகிய பிரமுகர்கள் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஜனநாயக தமிழ் அரசு கட்சி என்ற பெயரில் சுயேச்சையாக களமிறங்கவுள்ளனர்.
ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், தமிழ் அரசுக்கட்சியின் மகளிர் அணி தலைவிகளான விமலேஸ்வரி, நாகரஞ்சினி, கரவெட்டி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் த.ஐங்கரன், புதிய சுதந்திரன் ஆசிரியர் அகிலன் முத்துக்குமாரசுவாமி, ஊர்காவற்துறை பிரதேசசபை முன்னாள் உறுப்பினர் கருணாகரன் நாவலன் உள்ளிட்டவர்கள் போட்டியிடவுள்ளனர்.