உலக சந்தை தாக்கம் ; இலங்கையில் எரிவாயு விலை ஏற்றம்

Sri Lanka LAUGFS Gas PLC Liquefied Petroleum Gas Middle East
By Sahana Apr 07, 2026 05:20 PM GMT
Report

உலக சந்தையில் சவுதி அரம்கோ எரிவாயு விலை சுட்டெண் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு, உள்நாட்டிலும் எரிவாயு விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், மார்ச் மாதத்தில் சவுதி அரம்கோ விலை சுட்டெண்ணின் படி ஒரு மெட்ரிக் டொன் எரிவாயுவின் விலை 541.5 டொலரிலிருந்து 787.50 டொலராக அதிகரித்துள்ளது என்றார்.

இந்த உலகளாவிய விலை அதிகரிப்பானது லிட்ரோ மற்றும் லாப்ஃஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கும் பொதுவானது என்றும், அதற்கமையவே விலையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உலக சந்தை தாக்கம் ; இலங்கையில் எரிவாயு விலை ஏற்றம் | Global Market Impact Gas Price Hike In Sri Lanka

எரிவாயு விநியோகம் குறித்து மேலும் விளக்கிய அமைச்சர், புதிய ஒப்பந்தப்புள்ளியின் படி தற்போது 'ஜியோ கேஸ்' நிறுவனம் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது.

முன்னதாக ஓமானிலிருந்து எரிவாயு பெறப்பட்ட போதிலும், தற்போது 80 வீதம் அமெரிக்காவிலிருந்தும் 20 வீதம் தென்னாப்பிரிக்காவிலிருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது.

இதன்காரணமாக, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களால் எமது எரிவாயு விநியோகத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அவர் உறுதியளித்தார்.

இலங்கையில் பெருமளவிலான எரிவாயுவை ஒரே நேரத்தில் சேமித்து வைப்பதற்கான வசதிகள் போதியளவு இல்லாமையினால் மேலதிக செலவுகள் ஏற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தற்போது இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மாலைதீவில் உள்ள ஒரு நிறுவனத்தின் சேமிப்பகத்தில் வைக்கப்பட்டு, அங்கிருந்து மூன்று நாட்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்கள் மூலம் (தலா 3,900 மெட்ரிக் தொன்) இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறது.

இவ்வாறு அடிக்கடி கொண்டு வருவதால் ஏற்படும் மேலதிக போக்குவரத்து செலவுகளும் விலை அதிகரிப்பிற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது.

இலங்கையிலேயே நிரந்தரமாக எரிவாயுவைச் சேமித்து வைப்பதற்கான பாரிய சேமிப்பு வசதிகளை நிர்மாணிப்பதற்கான பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான மேலதிக செலவுகளைக் குறைத்து மக்களுக்கு சலுகை வழங்க முடியும் என்றும் அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.  

ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!

ஓரியன் விண்கலத்தின் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் பதற்றம்!

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US