ஒரே குடும்பத்தில் தந்தை, தாய் , மகள் உயிரிழப்பு; குடும்ப தகராறில் துயரம்
அனுராதபுரம் மாவட்டத்தின் கலென்பிந்துனுவெவ பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் தந்தை, மகள், தாய் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் பலத்த தீக்காயங்களுக்குள்ளான தாய், இரண்டு பிள்ளைகளும் மற்றும் பாட்டி ஆகியோர் அனுராதபுரம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அடிக்கடி மது அருந்துவது மனைவியைத் தாக்குவது
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தாய் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். உயிரிழந்த தந்தைக்கு 43 வயது என்றும், மகளுக்கு 13 வயது என்றும் தாய்க்கு 36 வயது என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
15 வயது மகள் மற்றும் 20 வயது மகன், 66 வயது பாட்டி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
முன்னதாக இவர்களுக்கு இடையே குடும்ப தகராறுகள் இருந்ததாக காவல்துறையில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், கணவர் அடிக்கடி மது அருந்துவது மற்றும் மனைவியைத் தாக்குவது தொடர்பாக காவல்துறையினருக்கு பல சந்தர்ப்பங்களில் முறைப்பாடுகள் வந்ததாகவும் கூறப்படுகிறது.

