180 பேருடன் ஈரானிய கப்பல் தாக்கப்பட்டதா? நாடாளுமன்றில் வெளியான முக்கிய தகவல்
காலி கடற்பரபரப்பில் ஈரான் கப்பலொன்று விபத்துக்குள்ளானது தொடர்பில் விபத்துக்குயுள்ளதா அல்லது அதன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளதா சாமர சம்பத் எம்.பி நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்,

மனிதாபிமான உதவி
கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் .
இன்று அதிகாலை இலங்கைக் கடல் எல்லைக்கு அப்பால் ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான 'ஐரிஸ் டெனா' (IRIS Dena) என்ற கப்பல் விபத்துக்குள்ளாகியுள்ளதாக தகவல் கிடைத்தது.
இதனையடுத்து உடனடியாகச் செயல்பட்ட இலங்கை கடற்படை, காலை 6:00 மற்றும் 7:00 மணியளவில் மீட்புப் படகுகளை அனுப்பி வைத்தது. விமானப்படை மற்றும் கடற்படை இணைந்து நடத்திய இந்தச் சிறப்பான நடவடிக்கையின் மூலம், கடும் ஆபத்தில் இருந்த சுமார் 30 பேர் மீட்கப்பட்டனர்.
அந்த கப்பலில் சுமார் 180 பேர் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைக்காக தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
1979 ஆம் ஆண்டின் 'சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு உடன்படிக்கையில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அந்த உடன்படிக்கையின் படி, கடலில் ஆபத்தில் இருக்கும் எவருக்கும் அவர்களின் தேசியத்தைப் பாராது மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டியது இலங்கையின் கடமையாகும் என்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தியது என அவர் தெரிவித்தார்.