யாழில் கடலுக்கு சென்று மாயமான மீனவர்கள் ; கண்டு கொள்ளாத பொலிஸார்
யாழ்ப்பாணம், வலி வடக்கு ஊரணி பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற இரண்டு மீனவர்கள் தொடர்பில் இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றச்சாட்டுகின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், கடந்த வெள்ளிக்கிழமை ஊரணி அன்னை வேளாங்கண்ணி கடற்தொழில் சங்கத்துக்கு உட்பட்ட மீனவர்கள் இருவர் கடலுக்கு மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர்.

இரு மீனவர்கள்
மறுநாள் வீடு திரும்பாத காரணத்தினால் எமது மீனவர்கள் குறித்த இரு மீனவர்களையும் தேடி கடலுக்குள் சென்ற நிலையில் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.
இவ்வாறான நிலையில் காங்கேசன் துறை பொலிஸ் நிலையத்துக்கும், கடற்படையினருக்கும் மீனவர்கள் காணாமல் போனமை தொடர்பில் தகவல் தெரிவித்தோம் ஆனால் ஆறு நாட்களாகியும் இதுவரை எமக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை.
கடந்த திங்கட்கிழமை கச்சதீவுக்கு அருகாமையில் இந்திய எல்லைக்கு அருகில் குறித்த இரு மீனவர்களையும் கண்டதாகவும் அவர்களுக்கு உணவும் நீரும் வழங்கியதாக இந்தியா மீனவர்கள் எமது மீனவர்களுக்கு தெரிவித்திருக்கிறார்கள் என தெரிவித்தனர்.