காதல் திருமணம் செய்ததால் எதிர்ப்பு ; மருமகனுக்கு மாமனார் செய்த சம்பவம், துடிதுடித்து பிரிந்த உயிர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கூட்டத்து அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). பால் கறக்கும் தொழிலாளி.
இவருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் ஆர்த்திக்கும் (21) கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடந்துள்ளது.
காதல் திருமணம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் குடும்பத்தினர் இவர்களது காதல் திருமணத்தை ஏற்கவில்லை என தெரிகிறது.
இதனால் மருமகன் ராமச்சந்திரனுடன், மாமனார் சந்திரன் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஊரின் பாசன கால்வாய் அருகே வந்த ராமச்சந்திரனை, சந்திரன் வழிமறித்து மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.
அப்போது சந்திரன் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் ராமச்சந்திரனை சரமாரியாக வெட்டியுள்ளார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து சந்திரனை கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.