அதிக விலைக்கு அரிசி விற்றவருக்கு நேர்ந்த கதி
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு அரிசி விற்றமைக்காக, கேகாலை நீதிவான் நீதிமன்றம் இரண்டு வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்துள்ளது.
இதன்படி, கலிகமுவ நகரத்தைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்துக்கு 500,000 ரூபாயை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவசர இலக்கங்கள்
அதே நேரத்தில் கேகாலையிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு 100,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
அத்தியாவசியப் பொருட்களின் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கும் நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்தநிலையில், நியாயமான வர்த்தக நடைமுறைகளை உறுதி செய்வதற்காக, வர்த்தக ஒழுங்குகளை மீறுவோர் தொடர்பில் 1977 என்ற அவசர இலக்கங்கள் ஊடாக முறையிடமுடியும் என்று நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவித்துள்ளது.