யாழில் சட்டவிரோத சீட்டு சர்ச்சை ; குடும்பஸ்தர் மீது கொடூரமாக தாக்கிய குழு
யாழில் சீட்டு காசு கொடுக்காததால் குடும்பஸ்தர் மீது கொடூர தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று வியாழக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், உடுவில் நாகம்மாள் கோவிலுக்கு அருகாமையில் வசிக்கும் பெண்ணொருவர் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் ஆலடி பகுதியைச் சேர்ந்த ஆணொருவரும் அவரிடம் சீட்டு கட்டி வருகிறார்.

அந்தவகையில் ஆலடி பகுதியை சேர்ந்த குறித்த நபருக்கு சீட்டு விழுந்துள்ளது.
இருப்பினும் அந்த காசு கொடுக்காத காரணத்தால் சீட்டு பிடிக்கும் பெண்ணின் கணவரை கடத்திச் சென்ற குழுவானது அவர் மீது கொடூர தாக்குதலை நடாத்திவிட்டு திரும்பி வந்தது.
இதன்போது வீதி கடமையில் இருந்த சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் தெரிந்த நிலையில் குறித்த தாக்குதலை நடாத்தியவர்களை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை தாக்குதலுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.