மீண்டும் பொருளாதார நெருக்கடி நிபுணர்கள் எச்சரி்க்கை ; எதிர்க்கட்சி தலைவர்
2028 ஆம் ஆண்டில் இலங்கை மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் என்று வெளிநாட்டுப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதன்போது விரும்பிய பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது, போதுமான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்க முடியாது.
அத்துடன், கடன்களைத் தீர்க்க ஆண்டுதோறும் தேவைப்படும் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈர்ப்பதற்கு வெளிநாட்டுப் பணத்தைப் பெற முடியாது என்றும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
மத்துகம பகுதியில் இடம்பெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் பேசிய சஜித் பிரேமதாச, 2028 ஆம் ஆண்டில் தொடங்கவுள்ள கடனை மீளச் செலுத்தும் திட்டத்தை ஆரம்பிப்பதற்குத் தேவையான அந்நிய நேரடி முதலீட்டில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நாட்டில் தற்போது இருப்பதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.