விரைவில் எதிர்பார்க்கப்படுகின்ற BYD வாகனங்கள் குறித்த நிபுணர் குழு அறிக்கை
BYD ரக வாகனங்களின் இயந்திரத் திறன் குறித்த நிபுணர் குழுவின் அறிக்கை அடுத்த சில வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என சட்டமா அதிபர் இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
இலங்கை சுங்கத்தால் முன்னதாக தடுத்து வைக்கப்பட்டிருந்த வாகனங்களை ஆய்வு செய்யும் பணிகள் இந்த நிபுணர் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனினும், பின்னர் இறுதி ஆய்வுகள் நிலுவையில் இருந்த நிலையில் வங்கி உத்தரவாதங்களின் பேரில் குறித்த வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
குறித்த வாகனங்களை இறக்குமதி செய்த ஜோன் கீல்ஸ் CG ஒட்டோ (பிரைவேட்) லிமிடெட் நிறுவனம் தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான நடவடிக்கைகளின் போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபரால் அறிக்கை தொடர்பான விடயம் அறிவிக்கப்பட்டது.