கிளிநொச்சி மக்களுக்கு அவசர எச்சரிக்கை; வான் பாயும் குளங்கள்!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் கிளிநொச்சி மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் காற்றுடன் கூடிய அதிக மழை காரணமாக நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

வான் பாயும் குளங்கள்
இதனையடுத்து, இன்று (28) காலை முதல் இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, கனகாம்பிகை குளம் தற்போது வான் பாய்ந்த நிலையில் காணப்படுகின்றது.

கல்மடு குளம் கொள்ளளவை எட்டி வான் பாய ஆரம்பித்துள்ளது. இதனால், குளத்தின் நீரேந்தும் பகுதிகளின் கீழ் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட்டு, தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
எனவே பொதுமக்கள் அனர்த்த நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.