யாழில் தவிசாளரின் வாகனத்தின் மீது விழுந்த மரம்; தெய்வாதீமனாக தப்பிய உயிர்கள்
யாழ்ப்பாணம் வலிக்காமம் வடக்கு பிரதேச சபையின் தவிசாளரின் வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று சரிந்து விழுந்ததில் வாகனம் சேதமடைந்துள்ளது.
வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் பாதீட்டுக்கான கூட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தவிசாளர் சோ. சுகிர்தன் தலைமையில் சபையின் சபா மண்டபத்தில், நடைபெற்றது.

தவிசாளரின் வாகனத்தில் பயணித்த உத்தியோகஸ்தர்கள்
அந்நிலையில் சேந்தாங்குளம் பகுதியில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் கண்காணிக்க பிரதேச சபை உத்தியோகஸ்தர்கள், தவிசாளர் சபை கூட்டத்தில் இருந்தமையால், தவிசாளரின் வாகனத்தில் பயணித்துள்ளனர்.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தின் மீது வீதியில் நின்ற மரம் ஒன்று விழுந்துள்ளது.

மரம் வாகனத்தின் பின் பகுதியில் விழுந்தமையால் , வாகனத்தினுள் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர் வாகனத்தின் மீது விழுந்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் பிரதேச சபை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
