கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் யானையின் உடலம் மீட்பு!
trinco
kantalai
forest area
elephant dead body
By Krishna
திருகோணமலை, கந்தளாய் சீனி ஆலை காட்டுப் பகுதியில் காட்டு யானையொன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த யானையின் உடலம் , வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேற்படி காட்டுப் பகுதியில் மாடு மேய்க்கச் சென்றவர்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, இறந்த காட்டு யானையின் உடலத்தை, வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
20 வயதுடைய காட்டு யானையொன்றே இறந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் குறித்த யானை நோய் வாய்ப்பட்டு இறந்துள்ளதா அல்லது ஏதாவது காயங்கள் காரணமாக இறந்துள்ளதா போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US