நாளையும் நாடு முழுவதும் சுழற்சி முறையில் மின்வெட்டு
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதியளவு எரிபொருள் கிடைக்க பெறாமையினால் நாளைய தினமும் சுழற்சி முறை மின்துண்டிப்பை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை இன்று பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவிடம் அனுமதி கோரியிருந்தது.
அதற்கமைய, A, B, C ஆகிய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு மாலை 4.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியினுள் சுழற்சி முறையில் 2 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஏனைய குழுக்களில் உள்ளடங்கும் பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில் மேற்படி காலப்பகுதியினுள் 3 மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உங்களது பிரதேசம் உள்ளடக்கப்பட்டுள்ள குழுவை அறிய