கொழும்பில் தமிழர்கள் வாழ் பகுதியில் அருவருப்பான செயல் ; கடும் விசனம்
கொழும்பு - வௌ்ளவத்தை காலிவீதி சம்பத் வங்கிக்கு முன்னால் உள்ள வீதி கடவை பொத்தானில் சாப்பிட்ட பபிள்கத்தை ஒட்டி வைத்த சம்பவம் தொடர்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது,
வீதியை கடப்பதற்காக பொத்தானை அழுத்த கையை வைக்கின்ற இடத்தில் யாரோ ஒருவர் இந்த அநாகரீகமாக சப்பிய பபிள்கத்தை, ஒட்டிவைத்துள்ளதாக சமூகவலைத்தள வாசி ஒருவர் பதிவிட்டுள்ளார்.

Clean Srilanka வேலைத்திட்டம் எப்படி சாத்தியமாகும்?
பலரும் பயன்படுத்தும் வீதி கடவை பொத்தானில் பபிள்கத்தை, சப்பி துப்ப இடமில்லாமல் வீதி கடவை பொத்தானில் ஒட்டியுள்ளமை விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாது வீதி சமிக்ஞைகளை மக்கள் மதிப்பது மிகவும் குறைவு என்றும், அதன் காரணமாகவே விபத்துக்கல் அதிகளவில் ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதேவேளை சிங்கப்பூரில் இவ்வாறு சப்பிய பபிள்கத்தை ஒட்டி வைத்திருந்தால் 2000 சீங்கப்பூர் டொலர் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.
அது இலங்கை பெறுமதியில் சுமார் நான்கு இலட்சத்து அறுபதாயிரம் ரூபா. அதேவேளை திரும்பத் திரும்ப செய்தால் 3 மாதம் வரை சிறைத்தண்டனை. அதுமட்டுமல்லாது பொது இடங்களில் துப்பினாலும் அங்கே சட்டம் பாயும். 1000 டொலரில் இருந்து 2000 டொலர் வரை தண்டம் செலுத்தவேண்டும்.
ஜனாதிபதி அனுரகுமார வழிகாட்டலில் நாடளாவிய நீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் Clean Srilanka வேலைத்திட்டம் , பொது இடங்களில் மக்களின் அநாகரீக செயல்பாட்டினால் எப்படி சாத்தியமாகும்? என்றும் கேள்வி எழுப்பட்டுள்ளது.
அதுமாடுமல்லாது வீதிகளில் எச்சில் துப்புவோரும், வாகனத்தில் செல்லும் சில சாரதிகள் பாக்கு வெற்றிலை மென்றும் அதனை வீதியில் துப்பிக்கொண்டே பயணைப்பது மிகவும் அருவருக்கத்தக்கது எனவும் பாதிக்கப்பட்டவர் சுட்டிகாட்டியுள்ளார்.