கள்ளக்காதலுக்காக கணவனை அடித்து கொன்ற மனைவி
இந்தியாவின் கள்ளக்காதலனுக்காக பெண் ஒருவர் அவரது கணவரை அடித்து தூக்கில் தொங்க வைத்துள்ள அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு தாலுகா இந்திராநகர் கிராமத்தைச் சேர்ந்த வீரண்ணா (44) என்பவர் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் சிவம்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 12 மற்றும் 10 வயது இரு குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன், எச்.டி.கோட்டை தாலுகாவைச் சேர்ந்த பலராம் என்ற இளைஞருடன் சிவம்மாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இதை கணவர் வீரண்ணா அறிந்ததைத் தொடர்ந்து தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.
கிராம மூத்தோர்கள் தலையிட்டதையும்விட, சிவம்மாவும் பலராமும் தங்களின் உறவைத் தொடர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 9 ஆம் திகதி இரவு, பலராமிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பை பார்த்த வீரண்ணா, மனைவியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனால் ஏற்பட்ட தகராறில், சிவம்மா வீரண்ணாவை தாக்கியதாகவும், அவர் உடனே உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், கணவரை தூக்கில் தொங்கவிட்டுச் தற்கொலை செய்துகொண்டார் என நாடகம் ஆடிய சிவம்மா, கிராம மக்களுக்கு தகவல் அளித்தார்.
நஞ்சன்கூடு பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். விசாரணையின் போது, சிவம்மா வீரண்ணாவை கொன்றது ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சிவம்மாவை கைது செய்துள்ளனர். இதேவேளை, சம்பவத்துக்குப் பிறகு தலைமறைவான பலராமை தேடி வரும் பொலிஸார், அவர் சம்பவத்தில் தொடர்புடையவரா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.