இலங்கைப் பெண்களில் 3 பேரில் ஒருவர் அதிக எடையாம்! எந்த வயதில் தெரியுமா?
இலங்கையில் கிட்டத்தட்ட 3 பெண்களில் ஒருவர் (29.6%) அதிக எடையுடனும், 18 முதல் 60 வயதுக்குட்பட்ட 8 பெண்களில் ஒருவர் (12.6%) உடல் பருமன் (Obese) கொண்டவர்களாக இருப்பதாக தேசிய ஊட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து கணக்கெடுப்பு தகவல்கள் கூறுகின்றன.
அந்த அறிக்கையின்படி, அதிக எடை மற்றும் உடல் பருமன் கொண்ட பெண்கள் 50-60 வயதுக்குட்பட்டவர்களாக காணப்படுகின்றனர்.

50-60 வயதுக்குட்பட்ட பெண்கள்
அதிக எடை, 25 கிலோ கிராம் முதல் 29.9 கிலோ கிராம் வரையிலான உடல் நிறைச் சுட்டெண்ணை குறிக்கிறது.
உடல் பருமன் என்பது 30 கிலோவுக்கும் அதிகமான இருப்பதை குறிக்கிறது.
2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி, நகர்ப்புறப் பெண்கள் அதிக எடை/உடல் பருமன் விகிதத்தை 57.5 சதவீதம் கொண்டுள்ளதாகவும், மத்திய பகுதிகளில் உள்ள பெண்கள் 22.8 சதவீதம் எடை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

அதேசமயம் 45.2 சதவீத பெண்கள் சாதாரண எடை கொண்டவர்களாக காணப்படுவதாகவும் கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 42.4 சதவீத நகர்புற ஆண்கள் அதிக எடை மற்றும் உடல் பருமனை கொண்டிருப்பதாக குறிப்பிடப்படுகிறது.
உலகளாவிய ஊட்டச்சத்து அறிக்கையின்படி (Global Nutrition Report), உணவுமுறை தொடர்பான தொற்றா நோய்கள் (NCD) இலக்குகளை அடைவதில் இலங்கை குறைந்த முன்னேற்றத்தையே இதுவரை காட்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.