ஜனாதிபதி அனுரவின் ஊழல் இல்லா நாடு; இவர்களை என்னவென சொல்வது?
இலங்கையை ஊழல் , லஞ்சம் அற்ற நாடாக மாற்ற ஜனாதிபதி அனுர குமார பல்வேறு அதிரடி நடவைக்கைகளை மேற்கொண்டும் வரும் நிலையில் , நாங்கள் திருந்த மாட்டோம் என லஞ்சம் வாங்கும் நபர்கள் சிலர் பிடிவாதமாக இருகத்தான் செய்கின்றார்கள்.
அந்தவகையில் இலங்கை பொக்குவரது பொலிஸார் ஒருவர், பொதுமகன் ஒருவரிடம் லஞ்சம் வாங்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

credit card mechine வைத்திருந்து லஞ்சம்
அண்மையில் பொலிஸார் லஞ்சம் பெறுவதை கண்காணிக்க அவர்களது உடையில் கேமாரா பொருத்த உள்ளதாக பொலிஸ் தலமையகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் குறித்த போக்குவரது பொலிஸ் அதிகாரி வீதியில் நின்று லஞ்சம் பெறும் காணொளி வெளியாகியுள்ளது.
அதுமட்டுமல்லாது பண்ம் இல்லை என கூறுபவர்களிடம் , பொலிஸார் credit card mechine வைத்திருந்து card ஐ வாங்கி பணம் எடுக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டுகளும் பொதுமக்களால் முன்வைக்கபப்ட்டுள்ளது.
இந்நிலையில் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல் உள்ளது இந்த பொலிஸாரின் நடவடிக்கை.