இலங்கை முழுவதும் இலத்திரனியல் வாகன சார்ஜிங் நிலையங்கள்
சீனா உட்பட உலக வாகன சந்தையில் இருந்து இலங்கை அதிக அளவில் மின்சார வாகனங்களை இறக்குமதி செய்ய ஆர்வம்காட்டி வருவதால், சீனாவின் நன்கொடையாக நாடு முழுவதும் இலத்திரனியல் வாகன சார்ஜிங் நிலையங்களை நிறுவுவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் விஜித ஹேரத் பரிந்துரைத்தார்.
எதிர்காலத்தில் அதிக மின்சார பஸ் வண்டிகளை இறக்குமதி செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதால் இது ஒரு முக்கியமான நடவடிக்கை யாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

பிரேரணை
சீன தூதுவர் கீ ஜென்ஹாேங் அமைச்சர் விஜித்த ஹேரத்தை நேற்று வெளிவிவகார அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இந்த பிரேரணையை முன்வைத்தார். அமைச்சரின் பிரேரணையை ஏற்றுக்கொண்ட சீன தூதுவர் இதுதொடர்பில் சீன அரசாங்கத்துக்கு அறிவுறுத்துவதாக குறிப்பிட்டடுள்ளார்.
அத்துடன் நாட்டில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள புகையிரத ஓடுபாதைகள் மற்றும் பாலங்களை மீள மறுசீரமைப்பதற்கு சீன அரசாங்கத்திடமிருந்து விரைவான ஒத்துழைப்பு எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரின் இந்த கோரிக்கை தொடர்பில் உடனடியாக சீன அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டுசெல்லவும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
மேலும், தித்வா சூறாவளிக்குப் பிறகு இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சேதங்களை மதிப்பிடு செய்து, சீன அரசாங்கத்தின் அனைத்துத் துறைகளிலிருந்தும் வழங்கக்கூடிய உதவிகள் குறித்து கலந்துரையாடி அறிவிப்பதற்கு எதிர்பார்ப்பதாக சீன தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார் என வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு விடுத்துள்ள அறி்க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.