யாழில் பண்டிகை காலத்தில் பெரும் சிரமத்தில் மக்கள் ; விடுக்கப்படும் கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் ஊடாக நெடுந்தீவுக்குச் செல்லும் பயணிகள் படகுகள் இன்றி தனியார் படகினை 45000 ரூபாய் செலுத்தி வாடகைக்கு அமர்த்தி பயணித்துள்ள சம்பவம் இன்று மாலை குறிகாட்டுவானில் இடம்பெற்றுள்ளது.
வருடப் பிறப்பு காலத்தை ஒட்டி அதிகளவிலான மக்கள் யாழ்ப்பாணத்திற்குச் சென்று பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலத்தில் மேலதிகமான பயணிகள் படகுச்சேவையினை முன்னெடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயணிகள் படகு சேவை
தீவுப் பகுதிகளுக்கான பயணிகள் படகு சேவை தொடர்சியாக இவ்வாறான குறைபாடுகளுடனேயே காணப்படுகிறது. தொடர்சியாக கோரிக்கையினை நெடுந்தீவு பிரதேச செயலகம்,பிரதேச சபை, கடற்ப்படையினருக்கு விடுத்து வருகிறோம், ஆனாலும் எது விதமான பயனும் இல்லை என நெடுந்தீவு மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறிபாட்டுவானில் இருந்து நெடுந்தீவுக்கு ஒருவர் 200 ரூபாய் கட்டணம் செலுத்தி பயணிக்க வேண்டிய நிலையில் ஒருவர் ஆயிரம் ரூபாய் செலுத்தி பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.
இன்று பயணிகள் படகின்றி பயணிக்க முடியாதவர்களில் பாலூட்டும் தாய்மார், சிறுவர்கள், என எழுபது பயணிகள் தனியார் படகொன்றை 45000 ரூபாய் வாடகைக்கு அமர்த்தி இரவு 7மணிக்கு பயணிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.