இலங்கையை ஆட்டிப்படைக்கும் போதைப்பொருள்; 22 நாட்களில் 480 சாரதிகள் கைது
2026 ஆம் ஆண்டின் கடந்த 22 நாட்களில் போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

135 விபத்துக்கள்
இக்காலப்பகுதியில் 135 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதில் 15 சாரதிகளும் 50 பாதசாரிகளும் உயிரிழந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
போதைப்பொருள் பயன்படுத்தி சாரதி தொழிலில் ஈடுபடும் அனைவரும் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கப்படுவார்கள். மக்களின் உயிரைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
சட்டம் அனைவருக்கும் சமமாக அமுல்படுத்தப்பட வேண்டும் என பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாரதிகளைப் பரிசோதிக்கவும், தொடர்ச்சியாக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் கடந்த 22 நாட்களில் போதைப்பொருள் பயன்படுத்திய 480 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அக்காலப்பகுதியில் 135 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், 22 நாட்களில் 15 சாரதிகளும் 50 பாதசாரிகளும் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையை உடனடியாக நிறுத்த முறையான வேலைத்திட்டம் ஒன்று அவசியம்.
எனவே, அனைத்து பஸ் உரிமையாளர்களும் தாங்கள் பணியில் அமர்த்தியுள்ள ஊழியர்கள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களும் தொடர்ச்சியான பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள், எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார்.