லண்டனில் சூடுபிடிக்கும் தமிழீழ வியாபாரம்; தேச போராட்டத்தை மழுங்கடிக்கும் தமிழ் அமைப்பு!
உள் நாட்டு போரால் நாடு இழந்து, வீடு இழந்து உயிர்களை கையில் பிடித்துகொண்டு நாட்டை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழ் மக்கள் பல்வேறு நாடுகளில் சென்று அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
நாடு கடந்த தமிழீழ அமைப்பு என்பது எம்மக்களின் வலிகளையும் , சுய நிர்ணய உரிமைகளையும் பெற்றுகொடுக்க வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய அந்த அமைப்பு இன்று லண்டனில் தமிழீழ வியாபாரமாக மாறியுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆரம்ப காலங்களில் மிக சரியாக நடவடிக்கைகளை முன்னெடுத்த இந்த அமைப்பு தற்போது வழிமாறி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.
தாயகத்தில் தமிழர்கள், இன்னும் சொந்த இடங்களிற்கு செல்லாது உள்நாட்டில் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றனர். தமிழர்களின் பிரதேசங்கள் பல பறிபோகும் அபாயத்தில் உள்ளது. மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஈழ மக்களுக்காக அமைக்கப்பட்ட இவ்வமைப்பு , எமது ஈழப்போராட்டதை மழுங்கடிப்பதும், ஈழபோராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இவர்களின் செயல் அமைந்துள்ளது.
இந்நிலையில் அந்த அமைப்பில் நடவடிக்கைகளானது புலம்பெயர் தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.