பிரான்ஸில் மனைவியின் கர்ப்பத்தில் சந்தேகம் ; இலங்கை தமிழ் பெண்ணுக்கு நிகழ்ந்த கொடுமை!
பிரான்ஸில் வசிக்கும் ஈழத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளம் குடும்பஸ்தருக்கு , மனைவியை தாக்கிய குற்றச்சாட்டில் பிரான்ஸ் Tribunal correctionnel நீதிமன்றம் 6 வருட சிறைதண்டனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ம் ஆண்டு தனது வீட்டில் வைத்து கர்ப்பிணி மனைவியை கட்டி வைத்து உடம்பில் சூடு வைத்தற்காக இலங்கை தமிழருக்கு மேற்பட தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இந்தியாவில் திருமணம்
கடந்த 2021 இல் பிரான்ஸ் வாழ் ஈழத்தமிழ் இளைஞனுக்கு அவரது உறவினரான பெண்ணுடன் இந்தியாவில் திருமணம் நடந்துள்ளது.
அதன்பின்னர் இலங்கை சென்ற யுவதி 2023 ஆம் ஆண்டு பிரான்ஸிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற சில வாரங்களில் பெண் கர்ப்பமான நிலையில், மருத்துவ சோதனைக்காக தம்பதிகள் சென்றுள்ளனர்.
இருவருக்கும் பிரான்ஸ் மொழி அவ்வளவாக தெரியாத காரணத்தால் மருத்துவர் கூறியதை தவறாக விளங்கியதால் கர்ப்பிணி மனைவி என்று பார்க்காது, பெண்ணின் அந்தரங்க பகுதி உள்ளிட்ட பல இடங்களில் கணவன் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணவனின் சித்திரவதை தாளாது பெண் அலரியதை அடுத்து அயலவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் வந்தபோது, கணவன் மது போதையிலும், பெண் கட்டிவைக்கப்பட்டு சித்திரவதை செய்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது.
மொழிப்பிரச்சனையால் விபரீதம்
கணவனை கது செய்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோதே உண்மை சம்பவம் வெளியாகியுள்ளது. மனைவி கர்ப்பமானதை அடுத்து இருவரும் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது , பெண்ணின் கர்ப்பம் 5 வாரங்கள் ஆகியுள்ளதாக மருத்துவர் கூறியுள்ளார்.
எனினும் மொழிப்பிரச்சனையால், தன் மனைவி 5 மாத கர்ப்பிணி என விளங்கிகொண்டதால் இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இலங்கை தமிழ் கணவனை விளக்கமறியலில் வைக்கப்பட்டு மனைவி மருத்துவமனையில் அனுமத்திப்பட்டார்.
தற்போது பெண் குழந்தையுடன் இளம் தாய் அரச பராமரிப்பில் குழந்தையுடன் வாழ்ந்து வரும் நிலையில், கணவருக்கு 6 வருட சிறைதண்டனை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.