டிக் டொக்கில் மயங்கி ஹோட்டல் வரை சென்ற வங்கி ஊழியர்; கண் விழிக்கையில் காத்திருந்த ஷாக்!
டிக்டொக் சமூக ஊடகம் மூலம் ஏற்பட்ட நெருங்கிய உறவில் தனியார் வங்கி ஊழியர் ஒருவர் பெருந்தொகை பணம், நகைகளை இழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள் மூலம் சந்தித்த நண்பர், கடந்த 19 ஆம் திகதி இரவு, பொரலஸ்கமுவ, கட்டுவாவலவில் உள்ள ஒரு ஹோட்டலில் தன்னை சந்தித்ததாகவும், ஒரு வகையான வாசனை திரவியத்தை சுவாசிக்க செய்து மயக்கமடைய செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

மயக்க மருந்து கொடுத்து கொள்ளை
இதனையடுத்து மறுநாள் கண் விழித்தெழுந்தபோது, தான் அணிந்திருந்த மூன்றரை பவுண் தங்க நகைகள், வங்கி அட்டை மற்றும் 258,000 ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோட்டை, படுஹேன பகுதியில் வசிக்கும் முன்னணி தனியார் வங்கியில் பணிபுரியும் ஊழியர் ஒருவரால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைக்கமைய, பொரலஸ்கமுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.