யாழில் இளைஞனால் பாடசாலை மாணவர்களுக்கு சிக்கல் ; பொலிஸார் கிடுக்குப்பிடி
யாழ்ப்பாணத்தில் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞன் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஐந்து சந்தி பகுதியை அண்மித்த பகுதியில் பாடசாலை மாணவர்கள் , இளைஞர்களுக்கு போதை மாத்திரை விற்பனையில் இளைஞன் ஒருவர் ஈடுபட்டு வருவதாக யாழ்ப்பாண பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டார்.

3 ஆயிரம் போதை மாத்திரைகள்
கைது செய்யப்பட்ட இளைஞனின் உடைமையில் இருந்து 3 ஆயிரம் போதை மாத்திரைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
அவற்றின் பெறுமதி சுமார் 10 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த நபரிடம் இருந்து போதை மாத்திரைகளை கொள்வனவு செய்த நபர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.