மட்டக்களப்பில் வைத்தியசாலைக்குச் சென்ற குடும்பபெண்ணை தேடும் உறவுகள்
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப் பற்றுப் பிரதேசத்திற்குட்பட்ட நாற்பதாம் கிராமம் (வம்மியடியூற்று) எனும் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய குடும்பப் பெண் ஒருவரை காணவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தொலைபேசி இலக்கங்கள்
கடந்த சனிக்கிழமை 28 ஆம் திகதி அன்று குறித்த பெண் பழுகாமம் வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் பழுகாமத்திலிருக்கின்ற வங்கி ஒன்றுக்கும் சென்றுவிட்டு அன்றயதினம் முற்பல் 11 மணியளவில் மீண்டும் அவரது வீடு செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்துள்ளார்.
அன்றையதினம் 11 மணிவரைக்கும் அப்பெண்ணின் பைபேசி தொடர்பிலிருந்துள்ளது. 11 மணிக்குப் பின்னர் அவரது தொலைபேசி இயங்கவில்லை, எனவும், எனினும் அக்குறித்த பெண் இதுவரையில் அவரது வீடு வந்து சேரவில்லை என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவம் தொடர்பில் அவரது உறவினர்கள் வெல்லாவெளி மற்றும் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.
குறித்த பெண் காணாமல் போன் அன்று சாம்பல் நிற சாரி அணிந்திருந்துள்ளார்.
குறித்த பெண்ணைக் கண்டால் 075 694 0655, 077 384 8385, 074 157 7381 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்குத் தகவல் தருமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.