மட்டக்களப்பு மரகறி வியாபாரிக்கு மர்ம நபர் செய்த சம்பவம் ; மக்களே அவதானம்
மட்டக்களப்பு, பார் வீதியில் மரக்கறி வியாபாரி ஒருவரிடம் போலி 5,000 ரூபா தாளைக் கொடுத்து மோசடி செய்த நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வீதியின் ஓரத்தில் 'பட்டா' ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவரே இவ்வாறு மோசடிக்கு ஆளாகியுள்ளார்.

போலி நாணயத்தாள்
இது குறித்து பாதிக்கப்பட்ட வியாபாரி இன்று காலை ஒருவர் வந்து தன்னிடம் மரக்கறி கொள்வனவு செய்து 5,000 ரூபா தாளைத் தந்துவிட்டு தான் சரியாகக் கவனிக்காததால் மிகுதிப் பணத்தையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டதாகவும் பின்னரே அது சாதாரண கடதாசியில் அச்சிடப்பட்டிருந்த போலி நாணயத்தாள் என்பதை அறிந்ததாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இச்சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் குறித்த வியாபாரி குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான மோசடி நபர்கள் போலி நாணயத்தாள்களைப் புழக்கத்தில் விடக்கூடும் என்பதால், பணப் பரிமாற்றங்களின்போது பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.