பிணையில் இருந்து வந்த பின் டக்ளஸின் முதல் காணொளி
தனது அரசியல் பயணம் தடையின்றித் தொடரும் என முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு நோக்கி மெதுவாக நகரும் தாழமுக்கம் ; யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் பிரதிபராஜா எச்சரிக்கை
டக்ளஸ் தேவானந்தாவுக்கு வழங்கப்பட்ட அனுமதியளிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று குற்றக்குழு உறுப்பினரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அவர் இன்று நீதிமன்றில் முன்னிலையாகிய போது பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் தமக்கு வழங்கப்பட்ட பிணை தொடர்பிலும் கைது குறித்தும் காணொளி ஒன்றின் ஊடாக கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
தம்மை திடீரென கைது செய்ததன் காரணமாக மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் கவலையை தன்னால் உணர்ந்துகொள்ள முடிகின்றது என அவர் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளை தனது தரப்பு உண்மைகளை எடுத்துரைத்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்க்கும் கம்பஹா மாவட்ட நீதிபதிக்கும் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவித்தார்.