இத்தாலிக்கு தப்பியோட முனைந்த இலங்கை கொள்ளையன் கைது!
பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமார, இத்தாலிக்குத் தப்பிச் செல்ல முயன்றபோது டுபாயில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் குறித்த சந்தேகநபர் அவரது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், பின்னர் மனைவியும் பிள்ளைகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் Golden Visa பெற்றவர்
முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் ஒருங்கிணைப்புச் செயலாளரின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில், பொலிஸாரால் தேடப்பட்டு வந்த ஒருவரே இந்த 'கொண்ட ரஞ்சி' என்ற ரஞ்சித் குமார எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைதான சந்தேகநபர் தற்போது டுபாய் பொலிஸ் தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, 'கொண்ட ரஞ்சி' ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் 'கோல்டன் விசா' (Golden Visa) எனப்படும் 10 வருடங்களுக்கான வதிவிட விசா பெற்றவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.