மறைந்த நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம்
தமிழ் திரையுலகின் பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜியின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன. மாரடைப்பு காரணமாக பிரபல நடிகர் டேனியல் பாலாஜி நேற்று (மார்ச் 29) இரவு காலமானார்.
அவருக்கு வயது 48. டேனியல் பாலாஜி , சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘காக்க காக்க’ படத்தில் ஸ்ரீகாந்த் என்ற பொலிஸ் பாத்திரத்தில் நடித்ததன் மூலம் கவனம் பெற்றார். பின்னர் ‘வேட்டையாடு விளையாடு’ படத்தில் வில்லனாக நடித்து அதீத கவனம் ஈர்த்தார்.
ரசிகர்கள் நெகிழ்ச்சி
அதுமட்டுமல்லாது இளைய தளபதி விஜய் இன் பைரவா திரைப்படத்திலும் வில்லன் வேடத்தில் கலக்கி இருந்தார். அவரது மறைவு திரை உலகினரை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை தனது கண்களை தானம் செய்ய நடிகர் டேனியல் பாலாஜி முடிவெடுத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதன்படி, அவர் மறைவை அடுத்து அவரது கண்கள் தானம் செய்யப்பட்டன.
சென்னை புரசைவாக்கத்தில் அவர் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் அங்கு வந்து கண்களை தானமாகப் பெற்றனர்.
“உயிரிழந்த பிறகும் அவர் மற்றவர்களுக்குப் பார்வையைத் தருகிறார்” என்று டேனியல் பாலாஜி குறித்து அவரது ரசிகர்கள் நெகிழ்ந்து வருகின்றனர்.
திரையுலகினர் பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்திவருகின்றனர்.