பிரபல வில்லன் டேனியல் பாலாஜி திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரையுலகம்
தென்னிந்திய திரையுலகில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி யாரும் மறக்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தவர் டேனியல் பாலாஜி அவர் சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.
அது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி ஆக்கி இருக்கிறது. மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார்.
சித்தி நாடகத்தில் நடிகராக அறிமுகமான இவர் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
அப்படி நெகடிவ் ரோல்களில் எல்லோரையும் கவர்ந்தவர் நடிகர் டேனியல் பாலாஜி. பைரவா, வேட்டையாடு விளையாடு, வட சென்னை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அவர்.
அவரது குரலுக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இளம் வயதில் அவரது திடீர் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது என்றும், நல்ல நடிகரை தமிழ் சினிமா இழந்துவிட்டது என்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.