சிகிச்சைக்காக வந்த இளம் தாயை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வைத்தியர்
25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியர் ஒருவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதற்காக மருத்துவ மையத்திற்குச் சென்ற 25 வயதுடைய ஒரு குழந்தையின் தாயை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக வைத்தியருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்த அனுராதபுரம் உயர் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.
குறித்த பெண்ணுக்கு 1.5 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தவறும் பட்சத்தில் மருத்துவருக்கு மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட வைத்தியருக்கு எதிராக அரசு தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கபட்டிருப்பதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.