வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
யாருக்கு தான் வெள்ளையான சருமத்தின் மீது ஆசை இருக்காது. ஒவ்வொருவருமே அப்படி வெள்ளையாக இருக்க வேண்டுமென்று தான் விரும்புவோம். அதற்காக கடைகளில் விற்கப்படும் விலையுயர்ந்த க்ரீம்களை வாங்கி நிறைய பேர் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த வகையான பொருட்கள் தான் சரும நிறத்தை அதிகரிக்க உதவும் என்று நினைத்தால், அது தவறு.
நம் வீட்டில் உள்ள பல பொருட்கள் நம் சருமத்தில் மாயங்களை புரியக்கூடியவை. இந்த பொருட்களைக் கொண்டு ஃபேஸ் பேக் போடும் போது, பலவிதமான சரும பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, சரும நிறம் மேம்பட்டு, சருமமும் பொலிவு பெறும். இப்போது சரும நிறத்தை அதிகரிக்க உதவும் சில நேச்சுரல் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிக்கவும், அதில் உள்ள தயிர் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் உதவுகிறது.

தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள கருமையைப் போக்கி, சரும நிறத்தை சீராக்க உதவும்.

ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பவுடரை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி, மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் வறண்ட அல்லது சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்றது.

பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு நன்கு கனிந்த சிறிது பப்பாளியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு அதை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்குவதோடு, சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவும்.

க்ரீன் டீ மற்றும் அரிசி மாவு ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவை எடுத்து, அத்துடன் தயாரித்து வைத்துள்ள க்ரீன் டீயை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின்பு அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் இருப்பதால், ப்ரீ ராடிக்கல்களால் சரும சேதமடைவது தடுக்கப்படுவதோடு, சருமமும் பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.
