சனிப் பிரதோஷ விரதம் யாரெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் தெரியுமா?
இந்துக்கள் சிவன், பார்வதி தேவியின் அருளை பெறுவதற்காக இருக்கும் ஒரு முக்கியமான விரதம் பிரதோஷ விரதம். இந்த விரதம் இந்த ஆண்டு மே 24ம் திகதி கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் சனிக்கிழமை என்பதால், சனி பிரதோஷ விரதமாக அனுஷ்டிக்கப்பட்டது.
பிரதோஷ விரதம் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் என்றாலும் சனிப் பிரதோஷ விரதத்தை யார் யாரெல்லாம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த விரதத்தை யார் ஒருவர் பக்தியுடன் இருக்கிறார்களோ, அவர்களுக்கு சிவபெருமானின் ஆசீர்வாதம் கிடைக்கும். அவர்களின் விருப்பங்கள் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
ஒவ்வொரு மாதமும் வரும் திரயோதசி திதியில் (வளர்பிறை மற்றும் தேய்பிறை) இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சனி பிரதோஷ விரதம் இருப்பதால், சனி பகவானால் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.
குறிப்பாக கால சர்ப்ப தோஷம், பித்ரு தோஷம் போன்ற பிரச்சினைகளுக்கு இது சிறந்த பரிகாரமாக கருதப்படுகிறது. சனி பிரதோஷம் விரதத்தை கடைப்பிடிப்பதால் பல பிரச்சனைகள், தடைகள் நீங்கும். சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய நாள். சாஸ்திரங்களின்படி, சிவபெருமான் தான் சனி பகவானின் குரு.
அதனால், சனி பிரதோஷ விரதம் சனி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை தீர்க்கும். சனி பகவானின் ஏழரை சனி, கண்ட சனி தாக்கம் குறையும். யாருக்காவது சனி தோஷம் இருந்தால், இந்த விரதம் அதன் பாதிப்பை குறைக்கும். இந்த விரதம் ஆசைகளை நிறைவேற்றும். வாழ்க்கையில் அமைதி, சந்தோஷம் தரும்.
வேலை, வியாபாரம் செய்யும் இடங்களில் கஷ்டம் இருந்தால், அது நீங்கும். இது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகளுக்கு ஒரு நல்ல தீர்வு. யாருக்கெல்லாம் வேலை, தொழிலில் பிரச்சனை உள்ளதோ, வாழ்க்கையில் நிம்மதி இல்லாத நிலை உள்ளதோ அவர்கள் இந்த விரதத்தை அவசியம் கடைபிடிக்க வேண்டும்.
சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த விரதம் இருந்தால், அதன் தீவிரம் குறையும். மேலும், இந்த விரதம் விருப்பங்களை நிறைவேற்றும். வாழ்க்கையில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் கொடுக்கும்.
வாழ்க்கையில் நிலையற்ற தன்மை, குழப்பமான சூழல், கடன் பிரச்சனை, நெருக்கடிகள், பிரச்சனைகள் ஆகியவற்றில் சிக்கி இருப்பவர்கள், தீராத துன்பங்களில் இருப்பவர்கள், விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்பவர்கள், தடைகளை அதிகம் சந்திப்பவர்கள் இந்த அற்புதமான சனிப் பிரதோஷ நாளில் விரதம் இருந்து, சிவ வழிபாடு செய்யலாம்.
அனைத்து பிரதோஷங்களிலும் விரதம் இருக்க முடியாதவர்கள் கூட சனிப் பிரதோஷம் அன்று விரதம் இருந்தால் இந்த துன்பங்கள் அனைத்திலும் இருந்து விடுதலை கிடைக்கும்.