உடல் எடையை குறைக்க எண்ணுபவர்கள் காலை உணவாக இதை பின்பற்றுங்கள்
எடை இழப்பில் உணவு முறை நேரடியாக சம்பந்தப்பட்ட ஒரு விடயமாகும்.
ஏனெனில் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும் முக்கிய காரணிகளில் ஒன்று அதிகப்படியான கலோரி உட்கொள்ளல் ஆகும்.
அதிக கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ள உணவு உடல் எடையை அதிகரிக்க வழிவகுக்கும்.
இதய நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் குறித்த ஆபத்தை ஏற்படுத்துகிறது.
காலை உணவு மிக முக்கியமான உணவாகக் கருதப்படுகிறது. ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடுவது எடை இழப்புக்கும் முக்கியமானது.
காலை உணவு முக்கியமானதாக இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று அது வளர்சிதை மாற்றத்தை கிக்ஸ்டார்ட் செய்ய உதவுகிறது.
தூங்கும்போது வளர்சிதை மாற்றம் குறைகிறது எனவே எழும்பும் போது உடல் அதன் அத்தியாவசிய செயல்பாடுகளைத் தொடங்குவதற்கு, தேவையான ஆற்றல் பெற காலை உணவை உட்கொள்வது அவசியம்.
ஒரு சத்தான காலை உணவு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதே நேரத்தில் பசியை குறைக்கிறது இது நாள் முழுவதும் உட்கொள்ளும் கலோரிகளின் எண்ணிக்கையை குறைக்கிறது.
உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கான காலை உணவு
முட்டை
முட்டை புரதத்தின் சிறந்த மூலமாகும் இது நாள் முழுவதும் உங்களை முழுதாக உணர வைக்கும்.
மூளையின் செயல்பாடு மற்றும் வளர்ச்சியை பராமரிக்க உதவும் கோலின் என்ற சத்தும் அவற்றில் உள்ளது.
தயிர்
தயிரில் கால்ஷியமுடன் அதிக புரதமும் குறைவான சர்க்கரையும் உள்ளது.
இது புரோபயாடிக்குகளின் சிறந்த ஆதாரமாகும், இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இதனால் உடலின் நச்சுக்களும் வெளியேறுகிறது.
ஓட்ஸ்
ஓட்ஸ் ஒரு குறைந்த கலோரி கொண்ட உணவாகும். இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக உணர வைக்கும்.
இது வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல ஆதாரமாகவும் இருக்கிறது.
உடல் எடையை குறைக்க முயற்சிக்கும் போது காலை உணவில் தவிர்க்க வேண்டியவை
சர்க்கரை அதிகம் உள்ள தானியங்கள்
பல தானியங்களில் சர்க்கரை அதிகமாகவும், புரதம் மற்றும் நார்ச்சத்து குறைவாகவும் இருப்பதால் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசி ஏற்படும்.
வெள்ளை ரொட்டி
வெள்ளை ரொட்டியில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளது.
இரத்தத்தில் சர்க்கரையின் அதிகரிப்பு ஏற்படலாம், இது சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே உங்களுக்கு பசியை ஏற்படுத்தும்.
காலை உணவு சாண்ட்விச்கள்
பல காலை உணவு சாண்ட்விச்களில் அதிக கலோரிகள், நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது.
எடை இழப்பு உணவுக்கு அவை ஆரோக்கியமான ஆப்ஷன் அல்ல.