போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல்
கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவரும் ஜுன் மாதம் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
4 மில்லியன் ரூபாய் கையூட்டல் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில் கையூட்டல் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் மோட்டார் வாகன திணைக்களத்தில் இந்த மூவரும் கைது செய்யப்பட்டனர்.
40 இலட்சம் ரூபாய் கையூட்டல் பெற்றுக் கொண்ட நாரஹேன்பிட்ட மோட்டார் வாகன திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் உள்ளிட்ட மூவர் இன்று கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரதி ஆணையாளர் எனவும், ஏனைய இருவரும் உதவி முகாமையாளர்கள் எனவும் கையூட்டல் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.