செயற்கை உணவுகளால் காத்திருக்கும் ஆபத்து
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகளவில் உட்கொள்வதும் உடலில் பல நோய்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணிகளாக உள்ளது.

அந்த வகையில் எவ்வாறான உணவுகளை உட்கொண்டால் உடலுக்கு எவ்வாறான பாதிப்பு ஏற்படுகின்றது நாம் இங்கு பார்ப்போம்.
இன்றைய இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வரும் துரித உணவு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாடு குடல் ஆரோக்கியத்தில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்
அத்துடன், மன அழுத்தம் மற்றும் பதற்றம் போன்ற உளவியல் காரணிகளும் குடல் ஆரோக்கியத்தில் நேரடித் தாக்கத்தை ஏற்படுத்தும்.

குறிப்பாக, மன அழுத்தம் மற்றும் பதற்றம் காரணமாக எரிச்சலூட்டும் குடல் நோய்க்குறி (IBS) ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும்
எனவே, இளைஞர்கள் தங்களது உணவுப் பழக்கவழக்கங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்
காய்கறிகள், பழங்கள், கீரைகள் மற்றும் தானியங்கள் உள்ளிட்ட இயற்கை உணவுகளை அதிகளவில் உணவில் சேர்த்துக்கொள்வதுடன், செயற்கை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் பயன்பாட்டை முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும்.
மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்கம் மற்றும் சீரான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
