நாட்டில் பெய்து வரும் கன மழை ; வான் பாயும் நீர்த்தேக்கங்கள் தொடர்பில் அறிவிப்பு
நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக ஆறு பிரதான நீர்த்தேக்கங்களும், இரண்டு நடுத்தர நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்வதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் வெடிப்புச் சத்தம்; பயணிகள் அவசர வெளியேற்றம் ; விமானச் சேவைகள் பாதிப்பு
நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறித்த தரவு அறிக்கையை வெளியிட்டுள்ள திணைக்களம் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கமைய, பிரதான நீர்த்தேக்கங்களில் அம்பேவெல, கந்தே எல, யான் ஓயா, ராஜங்கனை, தெதுறு ஓயா மற்றும் வான் எல ஆகிய நீர்த்தேக்கங்கள் தொடர்ந்து வான் பாய்ந்து வருகின்றன.

ராஜங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதை அடுத்து, 5 அடி வீதம் 2 வான் கதவுகளும், 4 அடி வீதம் 2 வான் கதவுகளும், 2 அடி வீதம் 2 வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் குறித்த நீர்த்தேக்கத்திலிருந்து கலா ஓயாவுக்கு வினாடிக்கு 5,365 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அதேபோல், தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் தலா 2 அடி திறக்கப்பட்டு, வினாடிக்கு 2,800 கன அடி நீர் தெதுறு ஓயாவுக்குள் திறந்து விடப்பட்டுள்ளது.
மேலும், நடுத்தர நீர்த்தேக்கங்களில் போமுரஎல்ல மற்றும் தெனகம வாவி ஆகியனவும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.